நடிகை மீராமிதுன் மீது குற்றச்சாட்டு பதிவு; விசாரணை தள்ளிவைப்பு


நடிகை மீராமிதுன் மீது குற்றச்சாட்டு பதிவு; விசாரணை தள்ளிவைப்பு
x

தாழ்த்தப்பட்டோர் குறித்து தவறாக பேசவில்லை என நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

நடிகையும், மாடல் அழகியுமான மீராமிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மீராமிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் மீது சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இந்தநிலையில் குற்றச்சாட்டு பதிவுக்காக இருவரும் ஆஜராக சென்னை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று அந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மீராமிதுன், சாம் அபிஷேக் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகினர். அவர்களிடம் வழக்கு விவரத்தை நீதிபதி படித்து காண்பித்தார். இதன்பின்பு, குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள், தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுப்பதாக கூறி விசாரணையை எதிர்கொள்வதாக தெரிவித்தனர்.

இதன்பின்பு, விசாரணைக்காக வழக்கை அடுத்த மாதம் (ஜூலை) 18-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


Next Story