சந்திரமுகி- 2 படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், 'சந்திரமுகி- 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது. இதனை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.இதனை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.இதனை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
Hi dear friends and fans!
— Raghava Lawrence (@offl_Lawrence) August 24, 2023
Tomorrow is #Chandramukhi2 audio launch. Need all your blessings pic.twitter.com/EWYVy6JWXc