அந்த காலத்தில் ரஜினியைப் போல் அதிக சம்பளம் வாங்கினேன் - விஜயசாந்தி மலரும் நினைவு


அந்த காலத்தில் ரஜினியைப் போல் அதிக சம்பளம் வாங்கினேன் - விஜயசாந்தி மலரும் நினைவு
x

அந்த காலத்தில் ரஜினியைப் போல் அதிக சம்பளம் வாங்கினேன் என விஜயசாந்தி தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

தமிழில் 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அறிமுகமான விஜயசாந்தி தொடர்ந்து ராஜாங்கம், நெற்றிக்கண், நெஞ்சிலே துணிவிருந்தால், சிவப்பு மல்லி, இளஞ்ஜோடிகள், மன்னன் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மலரும் நினைவுகளாக விஜயசாந்தி அளித்துள்ள பேட்டியில், ''நான் அனைத்து மொழிகளிலும் சுமார் 180 படங்களில் நடித்து இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கவே எனக்கு பிடிக்கும். சினிமாவில் நான் வாங்கிய முதல் சம்பளம் 5 ஆயிரம் ரூபாய்.ஆனால் படம் முடிந்ததும் என்னை ஏமாற்றி ரூ.3 ஆயிரம் மட்டும்தான் கொடுத்தார்கள். ரூ.3 ஆயிரம் சம்பளத்தில் ஆரம்பித்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்தேன்.அந்த காலத்தில் இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கிய டாப் 3 நடிகர்களில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சனுடன் நானும் இருந்தேன். இதை பெருமையாகவே சொல்லிக் கொள்கிறேன். பலமுறை நான் செத்து பிழைத்தேன். ஒருமுறை விமான விபத்து. மற்றொரு முறை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டேன். இன்னும் ஒரு முறை தீயில் மாட்டிக் கொண்டேன்.இத்தனை நடந்தாலும் நான் உயிர் பிழைத்தேன்''என்றார்.


Next Story