மோகன்லால் நடிக்கவுள்ள 'திரிஷ்யம் 3' படத்தின் அறிவிப்பு !


மோகன்லால் நடிக்கவுள்ள திரிஷ்யம் 3 படத்தின் அறிவிப்பு !
x

'திரிஷ்யம்' படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வெளியானது.

சென்னை,

கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் 'திரிஷ்யம்'. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது.

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றன. அதனை தொடர்ந்து இயக்குனர் ஜீத்து ஜோசப் இப்படத்தின் மூன்றாம் பாகமான 'திரிஷ்யம் 3' படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் 'திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் 'எம்புரான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னரே 'திரிஷ்யம் 3' படத்தில் இணைவார் என்று தெரிகிறது.


Next Story