மீண்டும் திருமணத்திற்கு ரெடியாகும் அமலாபால்: பிறந்தநாளில் காதலனை அறிமுகப்படுத்தினார்..!


மீண்டும் திருமணத்திற்கு ரெடியாகும்  அமலாபால்: பிறந்தநாளில் காதலனை அறிமுகப்படுத்தினார்..!
x

Image Credits : Instagram.com/j_desaii

தினத்தந்தி 26 Oct 2023 2:00 PM IST (Updated: 16 March 2024 5:01 PM IST)
t-max-icont-min-icon

நடிகை அமலாபால் தனது பிறந்தநாள் அன்று காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார்.

சென்னை,

மைனா, வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலாபால். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோது 2014-ல் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

பின்னர் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு படங்களில் அமலாபால் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார். அதன் உச்சமாக ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தார்.

இவர் தமிழில் கடைசியாக நடித்த 'கடாவர்' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இன்று நடிகை அமலாபால் தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமலாபாலின் நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய் தனது காதலை பிறந்தநாளில் அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை ஜகத் தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'எனது ஜிப்சி குயின்' என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அமலாபாலுடன் அமர்ந்து நடனத்தை ரசித்து கொண்டு இருக்கும் ஜகத் தேசாய், திடீரென்று எழுந்து சென்று நடனமாடி தனது காதலை வெளிப்படுத்துகிறார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமலாபால் முத்தம் கொடுத்து காதலை ஏற்றுக்கொண்டார். விடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.




Next Story