'ஸ்டார்' படத்திற்கு கூடுதல் காட்சிகள் - படக்குழு அறிவிப்பு


ஸ்டார் படத்திற்கு கூடுதல் காட்சிகள் - படக்குழு அறிவிப்பு
x

'ஸ்டார்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்து இருக்கிறார்.

'ஸ்டார்' திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அப்போது நடிகர் கவின், படத்தின் முதல்நாள் முதல் காட்சியை காண சென்னையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்றிருந்தார், அங்கு அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அவரிடம் புகைப்படம் எடுக்கவும் குவிந்தனர்.

இந்நிலையில் 'ஸ்டார்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருவதால் படத்திற்கு கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, 'ஸ்டார்' படத்திற்கு தமிழகத்தில் 180க்கும் அதிமான காட்சிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


Next Story