நடிகை திரிஷா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


நடிகை திரிஷா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

திரிஷா அடுத்ததாக இயக்குனர் அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ள 'தி ரோட்'.படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் நடிகை திரிஷா மற்றும் 'சார்ப்பட்டா' புகழ் டான்சிங் ரோஸ் ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகிய நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் 'தி ரோட்'.

மதுரையில் கடந்த 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

'தி ரோட்' திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படமாக அமைந்துள்ளது. சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடித்த 'லியோ' படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story