48 வயதில் நடிகை ஷர்மிலி கர்ப்பம்
கவர்ச்சி நடிகை ஷர்மிலி, கவுண்டமணியுடன் 27 படங்களில் நடித்துள்ளார்.
சென்னை
நடிகை ஷர்மிலி 48 வயதில் தான் கர்ப்பமாக இருப்பதாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கவர்ச்சி நடிகை ஷர்மிலி, கவுண்டமணியுடன் 27 படங்களில் நடித்துள்ளார். வடிவேலு, விவேக், வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோருடனும் இணைந்து நடித்துள்ளார்.ஷர்மிலி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
இதற்கிடையே பிரபல இணையதளத்தில் நடிகை வனிதா விஜயகுமார் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஷர்மிலி கலந்துக் கொண்டு, 48 வயதில் தான் (முதல் குழந்தை) கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் தனது 40 வயதில் ஐடி துறையைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர் நீதிபதிக்கு படித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார் ஷர்மிலி.
குடும்பம் நடத்த வயது ஒரு தடையல்ல என்பதை ஷர்மிலி உணர்த்தியதற்காக அவரை வனிதா விஜயகுமார் பாராட்டினார். நடனக் கலைஞராக இருந்து நடிகையாக மாறிய ஷர்மிலி, குழந்தை பிறந்த பிறகு தனது கணவரின் ஆதரவுடன் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.