கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை ரம்பா...!


கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை ரம்பா...!
x
தினத்தந்தி 1 Nov 2022 10:32 AM IST (Updated: 1 Nov 2022 11:30 AM IST)
t-max-icont-min-icon

நடிகை ரம்பா தனது குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது அந்த கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

சென்னை,

நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமாக 90களில் கனவுகன்னியாக வலம் வந்தவர். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை தனது க்யூட் நடிப்பால் உருவாக்கினார்.

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா என்பதும் ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்தார் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த நிலையில் கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பதும், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கூடிய புகைப்படங்களை அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.

இந்த நிலையில் நேற்று திடீரென ரம்பா தான் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரும்போது கார் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் தானும் தனது குழந்தைகளும் சிறிய காயத்துடன் உயிர் தப்பியதாகவும், ஆனால் அதே நேரத்தில் தனது குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.


Next Story