ஐ.நா. சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் இந்திய தூதராக நடிகை கரினா கபூர் நியமனம்


ஐ.நா. சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் இந்திய தூதராக நடிகை கரினா கபூர் நியமனம்
x

ஐ.நா. சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் இந்திய தூதராக பாலிவுட் நடிகை கரினா கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் உரிமைகளுக்காக ஐ.நா. சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம்(UNICEF) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐ.நா. சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் இந்திய தூதராக பாலிவுட் நடிகை கரினா கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நடிகை கரினா கபூர் கூறியிருப்பதாவது;-

"இந்த பொறுப்பை மிகுந்த கவுரவம் மற்றும் மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் பொறுமையுடன், மனநிறைவாக வேலை செய்திருக்கிறேன். இதையடுத்து இன்று ஐ.நா. சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்தின் தேசிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளேன். இதனால் எனது பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த பொறுப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு, இந்தியாவின் எந்த பகுதியில் எந்த குழந்தை பாதிக்கப்பட்டாலும், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், பேசக்கூடிய குழந்தையாக இருந்தாலும், அல்லது மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், அனைத்து குழந்தைக்கும் அவர்களது அடிப்படை உரிமை கிடைப்பதற்காக பாடுபடுவேன்."

இவ்வாறு கரினா கபூர் தெரிவித்துள்ளார்.


Next Story