பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் யாஷ் ஆறுதல்


பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் யாஷ் ஆறுதல்
x

மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

கடக்,

'கே.ஜி.எப்' படத்தில் கதாநாயகனாக நடித்து பான் இந்திய நடிகராக உயர்ந்தவர் யாஷ். கே.ஜி.எப்.படத்தின் 2-ம் பாகமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. இதையடுத்து நடிகர் யாஷ்-க்கு கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் உருவானது.

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் 3 ரசிகர்கள் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படும் என்று கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த நடிகர் யாஷ் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் ஆறுதல் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம், கொண்டாட்டத்திற்காக வாழ்க்கையை இழக்க வேண்டாம்,. பொறுப்புடன் செயல்படுங்கள், பேனர்கள் வைப்பதை நிறுத்துங்கள் என ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story