நடிகர் அஜித்குமார் நலமுடன் இருக்கிறார் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்


நடிகர் அஜித்குமார் நலமுடன் இருக்கிறார் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்
x

நடிகர் அஜித்குமார் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

நடிகர் அஜித்குமார் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் திடீரென்று நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருப்பதாக வலைதளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு மகன் ஆத்விக் பிறந்த நாளை குடும்பத்துடன் அஜித் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியான நிலையில் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் அஜித் உடம்புக்கு என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி உடல்நலம் குறித்து விசாரிக்க தொடங்கினார்கள். இதற்கிடையில் அஜித்குமாருக்கு மூளைப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், நடிகர் அஜித் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அறுவை சிகிச்சை முடிந்து அஜித் தற்போது நலமுடன் இருக்கிறார். இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். நடிகர் அஜித்திற்கு காதுக்கும் மூளைக்கும் இடையே நரம்பில் சிறிய கட்டி (வீக்கம்) இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தற்போது சாதாரண வார்டுக்கு அஜித் மாற்றப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story