"சினிமாவில் நடிப்பது சாதாரண விஷயம் அல்ல'' - திண்டுக்கல் லியோனி சொல்கிறார்


சினிமாவில் நடிப்பது சாதாரண விஷயம் அல்ல - திண்டுக்கல் லியோனி சொல்கிறார்
x

‘அற்றைத்திங்கள் அந்நிலவில்' என்ற பட விழாவில் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

"என்னுடைய மாணவர் ஜெயக்குமார் லாரண் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இன்னொரு மாணவர் பாபு ஆண்டனி. இந்த படத்தை சாதாரணமாக இவர்கள் எடுக்கவில்லை. பலவித யோசனைக்கு பிறகே எடுத்திருக்கிறார்கள். படம் என்றாலே ரத்தமும், சதையுமாக இருப்பதோடு காதல் காட்சிகள் இல்லாமல் இருக்கமுடியாது. ஆனால் இவர்கள், அதை மிக நாகரிகமாக கையாண்டிருக்கிறார்கள். ரத்தம், சண்டை காட்சிகள், பழைய பாணியிலான காதல் காட்சிகள் என்று பார்த்து பார்த்து புளித்துப்போய் வெறுத்துப்போன ரசிகர்களுக்கு இந்த 'அற்றைத்திங்கள் அந்நிலவில்' படம் புதிய அனுபவத்தை கொடுப்பதுடன், ஒரு விருந்தாகவும் அமையும் என்பது என் நம்பிக்கை.சினிமாவில் நடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். ஒரு படத்தில் நான் நடிக்கும்போது, ஒரே ஒரு உணர்ச்சியை காட்டுவதற்காக நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். அப்போது தான் புரிந்தது, நடிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல."

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story