'ஆலன்' படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் ஆர்யா


நடிகர் வெற்றி நடிக்கும் 'ஆலன்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குநர் சிவா .ஆர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' திரைப்படத்தில் வெற்றி, மதுரா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, 'அருவி' மதன் குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். கே. உதயகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை காசி விஸ்வநாத் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 3 S பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சிவா. ஆர் தயாரித்திருக்கிறார். கவிஞர் மனுஷ்யபுத்திரன், கேபிள் சங்கர் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் 'எட்டு தோட்டாக்கள்' வெற்றி கதையின் நாயகனாகவும், நாயகிகளாக ஜெர்மன் மதுரா மற்றும் அனு சித்தாராவும் நடித்திருக்கிறார்கள். ஆலன் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை தேடல்... மற்றும் ஓர் அழுத்தமான காதல் களம் என்று படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

'ஆலன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குநர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், தற்போது 'ஆலன்' படத்தின் டிரெய்லரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.


Next Story