இறுதி கட்டத்தை நெருங்கிய 'தக் லைப்' படப்பிடிப்பு!


இறுதி கட்டத்தை நெருங்கிய தக் லைப் படப்பிடிப்பு!
x

மணிரத்னம் இயக்கும் 'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 50 சதவீதம் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைப்'. 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார்.


இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார்.


முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை, ஜெய்சால்மர் மற்றும் புதுடெல்லி போன்ற இடங்களில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதற்கு கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இருவரும் இதுவரை முடிவடைந்துள்ள பகுதிகளுக்கு டப்பிங் செய்துள்ளனர்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 5-ந் தேதி மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வெளிநாடுகளில் நடைபெற உள்ளது. 'தக் லைப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்தப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், 'இந்தியன் 2', 'கல்கி 2898 ஏடி', 'தக் லைப்' என கமல்ஹாசன் நடிப்பில் 3 படங்கள் இந்த ஆண்டு வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Next Story