நடிகை கடத்தல் வழக்கு: விசாரணைக்கு நடிகர் திலீப் ஆஜர்

பிரபல மலையாள நடிகையை 2017-ம் ஆண்டு காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
சமீபத்தில் திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் அளித்த பேட்டியில், 'நடிகை வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியை கொலை செய்ய திலீப் திட்டமிட்டார் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் பரபரப்பானது. திலீப் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, திலீப் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி 23 (நேற்று) 24 மற்றும் 25-ந் தேதிகளில் திலீப் உட்பட 6 பேரும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் 27-ம் தேதி வரை திலீப்பை கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து நடிகர் திலீப், கமலச்சேரி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நேற்று காலை 9 மணிக்கு ஆஜரானார். அவரிடம் பலமணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story