ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: தரையில்தான் உறக்கம்...தீவிர விரதத்தில் இருக்கும் மோடி
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.
புதுடெல்லி,
ஜனவரி 22ம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக பிரதமர் மோடி 11 நாள் விரதத்தை கடைபிடித்து வருகிறார். கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் நேற்று முன் தினம் முதல் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடி விரத நாட்களில் கட்டிலில் தூங்காமல் வெறும் தரையில் மட்டுமே படுத்து தூங்கி வருகிறாராம். அது மட்டும் இன்றி இளநீர் மட்டுமே பருகிவருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. விரத நாட்களில் சில மந்திரங்களையும் உச்சரிக்கிறாராம். அலுவல் பணிகளுக்கு இடையே தீவிர விரதத்தையும் பிரதமர் மோடி கடைபிடித்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும், கோவிலுக்காக தியாகம் செய்தவர்களின் அடையாளமாக உள்ள ஜடாயு சிலையை பிரதமர் மோடி வணங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story