ராமர் கோவிலுக்காக குஜராத் விவசாயி தயாரித்த 1,100 கிலோ அகல் விளக்கு - அயோத்தி வந்தடைந்தது
மொத்தம் 851 லிட்டர் நெய் கொள்ளளவு கொண்ட இந்த விளக்கு 5 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த அரவிந்த்பாய் பட்டேல் என்ற விவசாயி 1,100 கிலோ எடை கொண்ட ராட்சத விளக்கை வடிவமைத்துள்ளார். மொத்தம் 9.25 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்ட இந்த விளக்கு தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம் மற்றும் இரும்பு ஆகிய 5 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மொத்தம் 851 லிட்டர் நெய் கொள்ளளவு கொண்ட இந்த விளக்கு தற்போது அயோத்தி வந்தடைந்துள்ளது.
Related Tags :
Next Story