என்ஜினீயர்களுக்கு வேலை
பெல் நிறுவனத்தின் சார்பில் பெங்களூருவில் இயங்கும் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் புராஜெக்ட் என்ஜினீயர், டிரெயினி என்ஜினீயர் என 428 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாரத் எலெக்ட்ரானிக் லிமிடெட் (பெல்) நிறுவனத்தின் சார்பில் பெங்களூருவில் இயங்கும் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் புராஜெக்ட் என்ஜினீயர், டிரெயினி என்ஜினீயர் என 428 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்லூரி படிப்பில் 55 சதவீத மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பணி அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். 1-4-2023 அன்றைய தேதிப்படி புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு 32 வயதும், டிரெயினி என்ஜினீயர் பணிக்கு 28 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. எழுத்துத்தேர்வு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-5-2023.
விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.bel-india.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.