செயற்கை மண்ணில் விவசாயம்


செயற்கை மண்ணில் விவசாயம்
x
தினத்தந்தி 14 Sept 2023 8:00 PM IST (Updated: 14 Sept 2023 8:00 PM IST)
t-max-icont-min-icon

ரஷியாவில் உருவாக்கியுள்ள செயற்கை மண்ணில் தாவரங்கள் வேகமாக வளர்கின்றன. சாதாரண மண்ணில் வளரும் காலத்தில், ஐந்தில் ஒரு பங்கு காலத்திலேயே இந்த மண்ணில் அறுவடை செய்ய முடிகிறது என்பது சந்தோஷத் தகவல்.

இதில் கலப்படம் இல்லாத நாட்டுத் தாவரங்களை வளர்க்கலாம். சாதாரண மண்ணில் கலந்திருக்கும் பலவகைக் கலப்படங்கள் இதில் இல்லாததால், அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகள் தவிர்க்கப்படுகின்றன. ஆராய்ச்சி மையத்தில் லெட்டூஸ், தண்டுக் கீரை, வெங்காயம் போன்ற 30 வகை தாவரங்கள் இந்த மண்ணில் வளர்க்கப்பட்டன.

ஜப்பானிய முள்ளங்கி 12 அடிக்கு மேல் வளர்ந்து சாதனை படைத்தது. மண்ணை உருவாக்கும்போதே ஊட்டச்சத்துக்களைக் கலந்து விடுகிறபடியால், பயிரிடும்போது தண்ணீர் மட்டும் விட்டால் போதும். வீடுகளில் இந்த மண்ணைக் கொண்டு காய்கறித் தோட்டம் போட்டால், காய்கறிகளைப் பறிப்பதைத் தவிர வேறு வேலையே இருக்காது. இந்த மண்ணில் விளைச்சலும் அமோகமாக இருக்கும்.

ஒரு சதுர மீட்டர் பரப்பளவுள்ள சாதாரண மண்பாத்திரத்தில் முள்ளங்கியைப் பயிரிட்டால் சில நாட்களுக்குள் ஒரு கிலோ முள்ளங்கி கிடைக்கும். அதே பரப்பளவுள்ள செயற்கை மண்ணில் 21 நாட்களில் 10 கிலோ முள்ளங்கி கிடைக்கும். இனி வீட்டு மாடியில் விவசாயம், செயற்கை மண்ணில் நடக்கும் பாருங்கள்..!


Next Story