வார ராசி பலன் 30.06.2024 முதல் 06.07.2024 வரை


வார ராசி பலன் 30.06.2024 முதல் 06.07.2024 வரை
x
தினத்தந்தி 1 July 2024 1:00 PM IST (Updated: 1 July 2024 1:21 PM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

இந்த வார ராசிபலன்

மேஷம்

மனதில் குதூகலம் ஏற்படும் வாரம் இது. செலவுகள் மட்டுப்பட்டு சேமிப்புகள் அதிகரிக்கும் காலகட்டம். தொழில்துறையினர் போட்டிகளை எதிர்கொண்டு சாதிப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவார்கள். தகவல் தொடர்புகளால் பல நன்மைகள் ஏற்படும்.ஒரு சிலருக்கு புதியவண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரிகள் புதுமையாக விளம்பரம் செய்து ஆதாய மடைவார்கள்.ஷேர் மார்க்கெட் திட்டமிட்ட லாபத்தை அளிக்கும். அரசாங்க காரியங்களில் அனுகூலம் ஏற்படும். தொழில்விரிவாக்கம் செய்வதற்கு கேட்ட வங்கிகடன் கிடைக்கும். பணியாற்றும் பெண்மணிகள் தங்கள் அலுவலக கடமைகளில் வழக்கத்தைவிட கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

மனதில் நிம்மதியை ஏற்படுத்தும் வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். இந்த வாரத்தில் இரவுப் பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. அவசியம் என்றால் பகலில் மட்டும் பிரயாணங்களை மேற்கொள்ளலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், விவசாயம் மற்றும் மீன்பண்ணை ஆகியவை ஆதாயம் அளிக்கும். கலைத்துறையினர், வியாபாரிகள் திட்டமிட்ட பயணங்கள் மூலம் லாபமடைவார்கள். தொலைபேசி வழி தகவல்கள் நல்ல செய்திகளை கொண்டு வரும். அனைத்து தரப்பினருக்கும் ஏதாவது ஒரு வகையில் பணவரவு கூடுதலாக இருக்கும். இல்லத்தரசிகள் மனதில் மகிழ்ச்சி ஏற்படும் காலகட்டம்.

மிதுனம்

பயணங்கள் மூலம் ஆதாயம் பெறும் வாரம் இது. ரியல் எஸ்டேட்தொழில், கல்வித்துறை, கலைத்துறை ஆகிய தரப்பினர் திட்டமிட்ட வெற்றிகளை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள், தொழில்துறையினர் எதிர்பார்த்த நன்மைகளை அடைவார்கள். செலவினங்கள் அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் அளவுக்கு பண வரவும் இருக்கும். வியாபாரிகள் புதிய தொடர்புகளால் நன்மை அடைவார்கள். நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டிய காலகட்டம் இது. இல்லத்தரசிகள் சிறுவயது நண்பர்களை சந்தித்து அளவளாவி மகிழ்வார்கள். புதிய கடன் வாங்கதிட்டமிட்டவர்கள் அதை சிறிது காலத்திற்கு தள்ளி வைக்கவும். ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் உள்ளவர்களுக்கு இது லாபகரமான வாரம். வெளியிடங்களுக்கு விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து செல்லும் பெண்மணிகள் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றி அடையும் வாரம் இது. தொழில்துறையினர், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் புத்துணர்ச்சியுடன் தங்கள் பணிகளில் ஈடுபடுவார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் தகவல்தொடர்பு துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெற்று ஆதாயம் அடைவார்கள். இந்த வாரம் அனைத்து தரப்பினரும் செலவு செய்வதற்கு முன்னர் பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். உடல்நலன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னேற்றமும், மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு உடல்நலமும் ஏற்படும். பழைய கடன்களை தீர்க்கும் சந்தர்ப்பம் உருவாகும். புதிய நண்பர்களுடன் தொடர்பு கொள்வதில் எச்சரிக்கை அவசியம். பணிபுரியும் பெண்மணிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளை மட்டும் செய்வது நல்லது. இல்லத்தரசிகளுக்கு இது ஒரு இனிமையான வாரம்.

சிம்மம்

மனதில் தெளிவான எண்ணங்கள் ஏற்படும் வாரம் இது. தொழில்துறையினர், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் வழக்கமான பணிகளில் மட்டும் ஈடுபட்டு வர வேண்டும். புதிய விஷயங்களில் ஈடுபடுவதற்கு முன்னர் நன்றாக திட்டமிட்டு அதில் இறங்க வேண்டும். மின்சாரம் உபகரணங்கள், எந்திரங்கள்,வண்டி வாகனங்கள் ஆகியவற்றை இயக்கும் போது கூடுதல் கவனம் அவசியம். கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள் கணக்கு வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விவசாயம், பொறியியல், ரியல்எஸ்டேட் ஆகிய துறையினருக்கு இந்த வாரம் புதிய தொடர்புகள் மூலம் லாபம் ஏற்படும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு இது ஆதாயம் தரும் வாரமாகும். இல்லத்தரசிகள் யாரிடமும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டாம்.

கன்னி

அலைச்சல்கள் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும் வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டம். ஷேர் மார்க்கெட் துறையில் உள்ளவர்கள் துணிகர முதலீடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவ ஆலோசனைகளை கவனமாக பின்பற்ற வேண்டும். மறைமுக எதிரிகள் மூலம் தொல்லைகள் உருவாகும். வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு சாதகமான காலகட்டம்.ஒரு சிலருக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சமூக அளவில் உங்களுடைய மதிப்பு உயரும் காலகட்டம். இல்லத்தரசிகள் அனைவரையும் அனுசரித்துச் செல்வது அவசியம்.

துலாம்

நண்பர்களால் பல்வேறு ஆதாயங்கள் கிடைக்கும் வாரம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் ஆதாயம் அடைவார்கள். வியாபாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் இந்தவாரம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கால்நடை, பண்ணைவிவசாயம் ஆகிய துறையினர் இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். ஷேர்மார்க்கெட், தகவல்தொடர்பு துறையினர் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். பணிபுரியும் பெண்மணிகள் பணியிடத்தில் அங்கீகாரம் பெறுவார்கள். பணியிட நண்பர்கள் உற்ற துனையாக இருப்பார்கள். குடும்பத்தில் தடைபட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் இந்த வாரம் ஏற்படும். ஒரு சிலர் பழைய கடன்களை திருப்பி செலுத்துவார்கள். செலவுக்கு ஏற்ற வரவு இந்த வாரம் இருக்கும்

விருச்சிகம்

குடும்ப சுபகாரியங்களுக்கு அச்சாரம் போடக்கூடிய வாரம் இது. உத்தியோகஸ்தர்கள், தொழில்துறையினர், வியாபாரிகள்எதிர்பார்த்த நன்மைகளை பெறுவார்கள். இந்த வாரம் உடல் மற்றும் மன நலனில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிகவும் நிதானம் அவசியம். நீண்டநாள் மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் உடல்நலனில் எச்சரிக்கை செலுத்த வேண்டும். எவரிடமும் அளவாக பேச வேண்டிய காலகட்டம் இது. கையில் உள்ள பணத்தை பாதுகாப்பாக சேமிக்க வேண்டும் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு வகையில் விரைவாக அந்தப்பணம் செலவாகி விடும். தகவல் தொடர்பு, ஷேர் மார்க்கெட் ஆகிய துறையினர் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். திட்டமிட்டு நிதானமாக செயல்பட்டு காரியவெற்றி அடைய வேண்டிய காலகட்டம் இது.

தனுசு

இந்த வாரம் தடைபட்ட பல சுப காரியங்கள் நடப்பதற்கான சூழல் உருவாகும். தொழில்துறையினர், வியாபாரிகள் திட்டமிட்ட வெற்றிகளை அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு லாபமடைவார்கள். வாழ்க்கை துணையுடன் கருத்து வேற்றுமை ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு வந்து சேரும். தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை சிறிது காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும். விவசாயதுறையினர் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். இல்லத்தரசிகளுக்கு இந்த வாரம் மனதில் ஒரு வித திருப்தி ஏற்படும். நண்பர்கள் எதிர்பாராத சூழலில் உதவிகரமாக செயல்படுவார்கள். ஒரு சிலர் பழைய வீடுகளில் மராமத்து பணிகளை மேற்கொள்வார்கள்.

மகரம்

புதிய நண்பர்களது தொடர்பு மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வாரம் இது. உத்தியோகஸ்தர்கள், தொழில்துறையினர், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகவும் அவசியம் ஏற்பட்டால் தவிர இரவு பிரயாணங்களை தவிர்க்கவும். நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்பவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், வயதானவர்கள் தேவையான மருத்துவ ஆலோசனைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த விஷயங்கள் நல்ல விதமாக நடப்பதற்கேற்ற சூழல் உருவாகும். கலைத்துறையினர், ரியல்எஸ்டேட், ஷேர்மார்க்கெட் ஆகிய துறையினருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய சிக்கல்கள் உருவாகி விலகும். இல்லத்தரசிகள் நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த பொருட்களை வாங்கி மகிழ்வார்கள்.

கும்பம்

மனதில் புதிய உற்சாகம் தோன்றி கண்களுக்கு புதிய பாதைகள் தென்படும் காலகட்டம் இது. சோதனைகளை தாங்கும் மனத்தெம்பு உருவாகும். பொருளாதாரரீதியாக இருந்த மந்த நிலை சற்றே விலகும். தொழில்துறையினர் கடுமையாகஉழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் மவுன மாகதங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளை செய்து வர வேண்டும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். ஒரு சிலர் புதிய பணி வாய்ப்புகளை பெறுவார்கள். கலைத்துறையினர் வெகுசிரமப்பட்ட பின்னரே வெற்றிகளை பெறமுடியும். பிள்ளைகளை சற்று விட்டுப் பிடிக்க வேண்டிய காலகட்டம் இது. செலவுகள் அதிகமாக இருந்தாலும் இல்லத்தரசிகள் மறைமுகமாக பணத்தை சேமிக்கும் வாய்ப்பு ஏற்படும். வெளி நபர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனைகளில் அதிக கவனம் தேவை.

மீனம்

மனதில் நிம்மதி ஏற்படும் காலகட்டம் இது. தொழில்துறையினர், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள், ரியல்எஸ்டேட், ஷேர் மார்க்கெட் ஆகிய துறைகள் லாபகரமாக இருக்கும். புதியவண்டி வாகனங்கள் மூலம் அதிர்ஷ்டம் உருவாகும். ஒரு சிலர் அசையா சொத்துக்களை வாங்கி மகிழ்வார்கள். சுபவிரயங்கள் ஏற்படும் காலகட்டம் இதுவாகும். வாழ்க்கைத்துணையிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம். ஆதாயத்தை எதிர்நோக்காமல் பல இடங்களுக்கும் பிரயாணம் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். வம்பு வழக்குகளில் சிக்கி இருந்த ஒரு சிலருக்கு வழக்குகள் சாதகமாக முடியும். அரசாங்க ஒப்பந்ததாரர்கள் இந்த வாரம் எதிர்பார்த்த ஆதாயங்களை பெறுவார்கள்.


Next Story