வார ராசிபலன்: 05.05.2024 முதல் 11.5.2024
தனுசு ராசிக்காரர்களுக்கு சென்ற வாரத்தின் அதே சிறப்பான, மகிழ்ச்சியான நிலை தொடரும். குடும்பத்தில் குதூகலத்திற்கு பஞ்சமில்லை.
வார ராசிபலன்
மேஷம்
வாரத்தின் முற்பகுதியில், உங்கள் உற்றார் உறவினர்களிடையே சுமூக உறவு நீடிக்க, பேச்சுக்களில் கவனம் தேவை. சிலர் வேண்டுமென்றே விஷமப்பேச்சுகளை பேசுவர். இது உங்கள் பணநஷ்டத்திற்கு காரணமாக அமையும். பெண்கள் வீட்டில் விதவிதமான உணவுப்பொருட்களை தயாரித்து, குடும்பத்துடன் உண்டு மகிழ்வார்கள். கடந்த சில வாரங்களாக உங்கள் நிம்மதியை கெடுத்த சில பிரச்சினைகள் மறைந்து, வாரத்தின் பிற்பகுதியில் நிம்மதியான உறக்கம் காணுவீர்கள். சிலருக்கு கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலர் கண் புரை அகற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும்.
ரிஷபம்
கணவன் மனைவியிடையே இருந்தவந்த சிறுசிறு மனஸ்தாபங்கள் வாரத்தின் பிற்பகுதியில் அகலும். சந்தோஷம் சிறகடிக்கும். சிலர் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விதவிதமான பலகாரங்கள் உண்டு மகிழ்வீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நவீன சிகிச்சை மூலம் குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புகள் உருவாகும். புதிய வேலை வாய்ப்புகள், புதிய தொழில்கள் சம்பந்தமான பேச்சுக்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். சிலருக்கு இடம் மாற்றத்தினால் செலவுகள் உருவாகும். எனினும் நஷ்டம் இன்றி கையாளும் கிரக நிலை உள்ளது. சிலருக்கு வாரத்தின் முற்பகுதியில் காதல் கைகூடும். பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம் இது.
மிதுனம்
தந்தை வழி சொத்துக்கள் சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு அதில் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. நிதானத்துடன் செயல்பட்டால், அதில் சிக்கல் ஏற்படாது. சுமுகமான தீர்வுக்கு வழிவகுக்கும். அரசாங்க வழிகளில் மற்றும் செய்தொழில் பணிகள் வாயிலான லாபம் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்குவதில் விற்பதில் லாபம் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுற்றத்தார் வருகையும், நீங்கள் அவருடைய இல்லத்திற்கு செல்வதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பெண்களுக்கு வேலை பளு அதிகம் உண்டு என்றாலும் மகிழ்ச்சிக்கு குறைவு இல்லை.
கடகம்
கடுமையான வாக்குவாதங்கள், வீண் சண்டைகள் தவிர்ப்பதால் உங்கள் மனஅமைதிக்கு பங்கம் இல்லை. சிலர் ஏராளமான பணம் சம்பாதிப்பீர்கள். ஆனால் அதை சரியான வகையில் நிர்வகிக்காவிட்டால், அது ஆற்றில் கரைத்த பெருங்காயம் போல் ஆகும். செய்தொழிலில் சிலருக்கு நிலையில்லாத நிலை ஏற்படும். சற்று கவனமுடன் செயல்பட்டால் தொழில் பாதிப்பு ஏற்படாது. சிலருக்கு ரியல் எஸ்டேட் வகையில் சிறந்த லாபம் உண்டு. அதே சமயம் பிள்ளைகள் வழியில் செலவுகளும் உண்டு. சற்று இறுக்கிப்பிடித்து செலவு செய்யுங்கள். பெண்கள் அசையா சொத்துக்களை தங்கள் பெயரில் வாங்குவீர்கள்.
சிம்மம்
உங்கள் உடமைகள் மீது கவனம் இருக்கட்டும் திருடு போக வாய்ப்புகள் உண்டு. உணவகங்களில் சமையல் பணியாற்றுவோர் சற்று ஜாக்கிரதையுடன் செயல்படுங்கள். வீண் கவலை சிலரை கவர் சூழ்ந்து கொள்ளும் எதிரிகளால் தொல்லை வந்து சேரும். இந்த வாரம் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் வீண் விரையங்களும் கவலைகளும் உண்டாகாது. சிலர் அரசாங்க ரீதியிலான கோபத்திற்கு ஆளாவீர்கள். எனவே அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நீங்கள் செயலாற்றுங்கள். உறக்க வாரத்தின் முற்பகுதியில் புதிய திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை தவிர்த்து விடுங்கள் பெண்கள் தெய்வ வழிபாட்டின் வாயிலாக அமைதி காண்பீர்கள்.
கன்னி
வாரத்தின் முற்பகுதியில் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரவு சுமூகமாக வந்து சேரும். ஏற்கனவே முயற்சித்த ஒப்பந்தங்கள் பணிகளில் உங்கள் கவனம் இருக்கட்டும். இது உங்களுக்கு நிறைந்த லாபத்தைத் தரும். நீண்ட கால திட்டங்களை வாரத்தின் அடுத்த வாரத்திற்கு தள்ளிப் போடவும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். இதில் உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். உங்களுடன் பழகியவர்களே உங்களைப் பற்றி புறம் பேசுவார்கள். இது உங்கள் மனதில் சிலேக்கியத்தை ஏற்படுத்தக்கூடும். திருமணத்திற்கு காத்திருக்கும் இருவாளருக்கும் திருமணத்திற்கான முயற்சிகள் உண்டாகும். சிலருக்கு திருமணம் நிச்சயமாகும்.
துலாம்
இந்த வாரம் ஆதரவும் எதிர்ப்பும் கலந்திருக்கும் வாரத்தின் முற்பகுதியில் பணவரவுக்கு வாய்ப்புகள் உண்டு. புதிய முயற்சிகள் வேண்டாம். சிலருக்கு வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் எழக்கூடும். வெளியிடங்களில் அசுத்தமான ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளில் உள்ள உணவு பதார்த்தங்களை தவிர உங்கள் எதிர்பால் இனத்தவர்களால் பிரச்சினைகள் உருவாக வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை. உங்கள் வாகனங்களில் செல்லும்போதும் ஓட்டும்போதும் மிக கவனமுடன் இருப்பது நல்லது. இதில் விபத்துகளை முற்றிலும் தவிர்க்கலாம். மிக சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். எதிரிகளை வெற்றி கொள்ளும் வாரம் இது. பெண்களுக்கு நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.
விருச்சிகம்
தொழில் சம்பந்தமாக கணவன் மனைவி வேறு வேறு இடம் என்று இருந்த நிலை மாறி ஒன்று சேரும் வாரம் இது. விரும்பிய இடத்திற்கு சிலருக்கு பணியிட மாற்றம் உண்டாகும். காதலர்கள் சந்தித்து தங்கள் உறவை மேம்படுத்திக் கொள்ளும் வாரம். சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். சுய மருத்துவத்தை தாருங்கள் சிறந்த மருத்துவர் பெறுங்கள். வாரத்தின் பிற்பகுதியில் காரிய தடை தாமதம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. சிலர் குறுகிய காலத்திற்கு வெளிநாடு சென்று திரும்ப வாய்ப்புகள் உருவாகும் வாரம் இது. பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
தனுசு
சென்ற வாரத்தின் அதே சிறப்பான நிலை மகிழ்ச்சியான நிலை தொடரும். குடும்பத்தில் குதூகலத்திற்கு பஞ்சமில்லை. சிலர் தங்களுக்கு பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் எற்படக்கூடும். கவலை வேண்டாம். இதுவரை இருந்து வந்த மிகப்பெரும் பணப்பிரச்சினைகள் வழக்குகள் சொத்து பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிட்டும். வாரத்தின் முற்பகுதியில் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் பிற்பகுதியில் செலவுகளைக் குறைக்க வழி தேடுங்கள். பெண்களுக்கு கொண்டாட்டமான வாரம் இது.
மகரம்
சிலருக்கு வெளிநாட்டு பணி அல்லது வெளிநாடு சம்பந்தமான உள்நாட்டிலேயே இருந்து பணியாற்றும் யோகம் அமையும். எனினும் வீண் நகைச்சுவை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கும். சிலர் குடும்ப பிரச்சினை காரணமாக வேலையை விடும் சூழ்நிலை ஏற்படும். குடும்ப பிரச்சினைகளுக்கு தக்கவாறு முடிவு எடுத்தால் வேலை இழப்பையும் தவிர்க்கலாம். வீண் அலைச்சலையும் தவிர்க்கலாம். அமைதியை உண்டாக்கிக் கொள்ளலாம் என்ற போதிலும் கடந்த வாரங்களில் இருந்த பண பற்றாக்குறை இந்த வாரம் இருக்க வாய்ப்பில்லை. குடும்பத்தின் சூழ்நிலை தெரிந்து பெண்கள் சாமர்த்தியமாக செயல்படுவார்கள்.
கும்பம்
வாகனத்தில் செல்லும் முன் உங்களிடம் உரிய உரிமம் காப்பீட்டு முறை முறையாக செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அபராதம் கட்ட நேரிடும். அரசாங்கம் சம்பந்தமான வரி வகைகள் சரியான காலகட்டத்திற்குள் கட்டி விட்டீர்களா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உங்கள் இளைய சகோதரர் உடல் நலனில் அக்கறை காட்டுவதால் அவர்களின் ஆரோக்கியம் சிறக்கும். சிலருக்கு பித்தம் சம்பந்தமான உடல் உபாதைகளால் ஆரோக்கியம் சற்று பாதிக்கும்.
மீனம்
கடந்த பல மாதங்களாக இருந்து வந்த உடல் உபாதைகள் ஆரோக்கிய சீர்கேடுகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பாக அமைந்து ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை அச்சுறுத்தி வந்த உடல் ஆரோக்கியம் தற்போது மெல்ல சீராக கிரகங்கள் சாது ஏதுவாக இருக்கிறது. எதிலும் துணிச்சலான முடிவு எடுக்கும் வாரம் இது. தம்பதிகளிடையே சிறு சிறு பிரச்சனைகள் எழக்கூடும். கவனமுடன் இருந்தால் இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். உங்கள் கவனமான பேச்சு உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தாது. சிலர் கண் சம்பந்தமான மருத்துவம் அல்லது கண் புரை நோய்க்கான அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆயத்தமாவீர்கள். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். இது உங்கள் உடல் நலனுக்கு மிக உகந்ததாக அமையும்.