தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதமடித்த வெயில்


தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதமடித்த வெயில்
x

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எனினும், ஒருசில பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு அனல் காற்று வீசியது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள்;

* மதுரை விமான நிலையம் 105 டிகிரி பாரன்ஹீட்

* மதுரை நகரம் 104 டிகிரி பாரன்ஹீட்

* கரூர் பரமத்தி 102 டிகிரி பாரன்ஹீட்

* நாகை 102 டிகிரி பாரன்ஹீட்

* ஈரோடு 101 டிகிரி பாரன்ஹீட்

* தூத்துக்குடி 101 டிகிரி பாரன்ஹீட்

* திருச்சி 101 டிகிரி பாரன்ஹீட்

* தஞ்சாவூர் 100 டிகிரி பாரன்ஹீட்


Next Story