அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 1-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. சென்ட்ரல், நுங்கம்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், மயிலாப்பூர், வடபழனி, கோயம்பேடு, கே.கே.நகர், அண்ணா நகர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெயதது. புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, கரையான்சாவடி, மாங்காடு, திருவேற்காடு, அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், வேலப்பன்சாவடி, திருமழிசை, செம்பரம்பாக்கம், குமணன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.