இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு


இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம்

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story