சுய தொழில் செய்வோருக்கு வருமான வரி இல்லை...!
சுய தொழில் செய்து வருமானம் ஈட்டுபவர்களின் மாத வருமானம் ரூ.58,250 வரை இருந்தால் வருமான வரி இல்லை.
மத்திய நிதி -மந்திரி நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில்
* சுய தொழில் செய்து வருமானம் ஈட்டுபவர்களின் மாத வருமானம் ரூ.58,250 வரை இருந்தால் வருமான வரி இல்லை.
* புதிய வருமான வரி திட்டத்தின் படி மாதம் ரூ.62,500 வரை சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.
*சிறு, குறு நடுத்தர தொழில் பிரிவினரை மேம்படுத்துவதற்காக ரூ.9000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு குறு தொழில்களுக்கான கடன் வட்டியை 1% ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிறுகுறி தொழில்களுக்கு பிணையில்லா கடன்கள் வழங்கப்படும்.
* 47 லட்சம் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* 1 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்படும். வங்கி சேவை தொடர்பான சட்டங்கள் எளிதாக்கப்படும்.
* இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க 30 மையங்கள் அமைக்கப்படும்.
* பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை குறித்து ஒரு வார்த்தைக்கூட இடம்பெறவில்லை!
*மூலதன செலவினங்களுக்கான நிதி நடப்பு நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரிப்பு