இந்தியாவின் உதவியை நாடும் உலக நாடுகள் - ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை


இந்தியாவின் உதவியை நாடும் உலக நாடுகள் - ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
x

இன்று தன்னம்பிக்கையில் உயர்ந்து நிற்கிறது இந்தியா, உலகமே இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது.

புதுடெல்லி,

ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கும் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றினார்.

* இன்று தன்னம்பிக்கையில் உயர்ந்து நிற்கிறது இந்தியா, உலகமே இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது.

* ஏழை மக்கள் முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

* ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன் பெண்களின் ஆரோக்கியத்திலும் மேம்பாடு ஏற்பட்டுள்ளது.

* வடகிழக்கு மாநிலங்களில் அரசியல் சூழல், பொருளாதாரம் நிலையாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* ஜிஎஸ்டி, மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகியவை இந்தியாவின் வரப்பிரசாதங்கள்.

* உதான் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் விமான பயணம் என்பது சாத்தியமாகி உள்ளது.

* 2014-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் 260 மருத்துவ கல்லூரிகளை அரசு கட்டி உள்ளது.

* அரசின் புதிய முயற்சிகளால் நமது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது.

* பிரமோச் ஏவுகணைகளின் வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

* ராஜபாதையை கடமை பாதை என பெயர் மாற்றியதன் மூலம் அடிமைத்தன விஷயங்கள் அகற்றப்பட்டுள்ளது.

* அடிமைத்தனத்தை, காலனி ஆதிக்கத்தை நினைவூட்டும் விஷயங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது.

* விமரிசையாக நடந்த காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி ஒற்றுமையை வெளிப்படுத்தியது.

"ஆப்கானிஸ்தானில் பூகம்பமோ, இலங்கையில் பொருளாதார பிரச்சனையோ, எது வந்தாலும் இந்தியா உலக நாடுகளுக்கு உதவி வருகிறது"

* உலகின் மிகப்பெரிய மின்சார ரயில் நெட்வொர்க் என்ற நிலைக்கு இந்திய ரயில்வே வேகமாக முன்னேறி வருகிறது.

* இந்தியாவில் சுமார் 90,000 ஸ்டார்டப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன

* உலக அளவில் விமானப்போக்குவரத்தில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது

* பசுமை எரிசக்தியில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது

* 27 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது

* அரசு தொழில்முனைவோருக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது;

* நமது இளைஞர்கள் தங்கள் புதுமையின் ஆற்றலை உலகுக்குக் காட்டுகிறார்கள்

*அந்தமான் நிக்கோபாரில் உள்ள ஒரு தீவு நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது;

* பல தீவுகளுக்கு வீரர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளன

* இந்தியா மிகப்பெரிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது.


Next Story