இன்றைய ராசிபலன் - 13.09.2024


Today Rasi Palan - 13.09.2024
x
தினத்தந்தி 13 Sep 2024 3:19 AM GMT (Updated: 13 Sep 2024 3:44 AM GMT)

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆவணி மாதம் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம்: இன்று மாலை 6.27 வரை பூராடம் பின்பு உத்திராடம்

திதி: இன்று மாலை 06.18 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 9.15 - 10.15

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் காலை: 10.30 - 12.00

எமகண்டம் மாலை: 3.00 - 4.30

குளிகை காலை: 7.30 - 09.00

கௌரி நல்ல நேரம் காலை: 12.15 - 01.15

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: கிருத்திகை, ரோகினி

இன்றைய ராசிபலன்:

மேஷம்

பிள்ளைகளது ஆசிரியர் புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர். தாங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். வீடு வாங்க கடன் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும்.

அதிர்ஷட நிறம்: சிவப்பு

ரிஷபம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான விசயமாக இருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளளாம். புதிய முயற்சிகள் வேண்டாம். இன்று இறைவனை பிரார்த்தித்து கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்வது தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷட நிறம்: மஞ்சள்

மிதுனம்

வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கழுத்து வலி வந்து நீங்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். பழைய வாகனத்தை விற்கும் எண்ணம் தோன்றும். எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். கோவில் விழாக்களில் மரியாதை கிடைக்கும். வெளியூர் செய்தி மகிழ்ச்சியைத் தரும்.

அதிர்ஷட நிறம்: நீலம்

கடகம்

பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை தேவை. உற்சாகம் மிகுந்த நாள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள்.

அதிர்ஷட நிறம்: கருஞ்சிவப்பு

சிம்மம்

புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சி தரும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். பணவரவுக்கு பஞ்சமில்லை. கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும். விலை உயர்ந்த பொருள் கைக்கு வந்து சேரும்.

அதிர்ஷட நிறம்: ஆரஞ்ச்

கன்னி

தான் விரும்பிய பெண்ணை கைப்பிடிப்பீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பிரபலங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வெளியூருக்கு மாற்றலாவர். வியாபாரம் சாதகமாக இருக்கும். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும்.

அதிர்ஷட நிறம்: ஊதா

துலாம்

திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நற்செய்தி வரும். வழக்கில் இழுபறிகள் நீங்கி நல்ல முடிவு ஏற்படும். புதியவர்களின் நட்பால் நன்மை உண்டாகும். சுப செலவுகள் அதிகமாகு;ம். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு இழந்த பதவி கிடைக்கும். விருந்தினர்கள், உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும்.

அதிர்ஷட நிறம்: சாம்பல்

விருச்சிகம்

மாணவர்கள் விடுமுறையை உபயோகமாக பயன்படுத்துவர். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். பிள்ளைகளுக்கு உயர் கல்வியில் ஆர்வம் பிறக்கும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள்' விலகும். பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். நட்பு வட்டம் விரிவடையும். வெளியூர் பயணம் வெற்றி தரும்.

அதிர்ஷட நிறம்: மஞ்சள்

தனுசு

பணப் புழக்கம் மிகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழிலில் அலட்சியபோக்கு நீங்கும். கணவருடன் கருத்து வேறுபாடு. விட்டுக் கொடுப்பது நல்லது. புதியவர்கள் நண்பர்களாவார்கள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். மகளுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். தங்கள் மகனுக்கு விசா கிடைக்கும். நம்பிக்கைக்குரியவரை சந்தித்து மகிழ்வீர்கள். சோர்வும் களைப்பும் நீங்கும் நாள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்பிரச்சினை இருக்காது. விட்டுப்போன நட்பை தொடர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கும்பம்

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் மிகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வழக்கறிஞர்களுக்கு புகழ் ஓங்கும். உறவினருடன் விடுமுறையைக் கழிப்பீர்கள். யாருக்கும் பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். அரசியலில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

மீனம்

தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். தம்பதியர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். தோல்வி பயம் நீங்கும். விடுமுறை நாட்களில் புதிய கலைகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்


Next Story