இன்றைய ராசிபலன் - 07.07.2024


இன்றைய ராசிபலன் - 07.07.2024
x
தினத்தந்தி 7 July 2024 8:51 AM IST (Updated: 7 July 2024 8:52 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆனி மாதம் 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை.

நட்சத்திரம்: இன்று காலை(6.01) வரை புனர்பூசம் பிறகு பூசம்.

திதி: துவிதியை திதி பின்இரவு(5.52)க்கு மேல் திருதியை திதி.

யோகம்: சித்தயோகம், மேல்நோக்குநாள்.

நல்ல நேரம் காலை: 7.45-8.45

மதியம் : 1.45-2.45

ராகுகாலம் மாலை: 4.30-6.00

எமகண்டம் : மதியம் : 12.00-1.30

குளிகை மாலை: 3.00-4.30

சூலம் : மேற்கு

சந்திராஷ்டமம்: தனுசு

இன்றைய ராசிபலன்:

மேஷம்

முன்னேற்றம் கூடும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. தேக நலனில் அக்கறை செலுத்தவும். சில நேரங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

ரிஷபம்

யோகமான நாள். பிரியமான வர்களோடு ஏற்பட்ட பிரச்சினை தீரும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. குடும்ப அமைதிக்காக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள், கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

மிதுனம்

நெருக்கடி நிலை அகலும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்கள் நல்ல தகவலைத்தருவர்.

கடகம்

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

சிம்மம்

செல்வாக்கு உயரும் நாள். வரவு வந்தாலும் செலவு கூடுதலாகும். முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் பக்கத்தில் உள்ளவர்களின் பகை அதிகரிக்கும்.

கன்னி

தடைகள் அகலும் நாள். தன் பிள்ளைகளின் எதிர்கால வரவு திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. வியாபார விருத்திக்கு புதிய கூட் டாளிகள் வந்திணைவர். தொலைதூர பயணங்கள் நன்மை தரும்.

துலாம்

எதிரிகளின் பலம் கூடும் நாள். எல்லோரையும் அனுசரித்துச்செல்வது நல்லது. பொதுவாழ்வில் பிரச்சினைகள் உருவாகும். உத்தியோ கத்தில் அதிகாரிகளிடம் கருத்து முரண்பாடுகள் வந்து போகும்.

விருச்சிகம்

வாயிலைத்தேடி வருமானம் வந்து சேரும் நாள். கோவில் வழிபாடு களில் மனதைச் செலுத்துவீர்கள். உங்கள் சுதந்திரப் போக்கிற்கு இருந்த குறுக்கீடுகள் அகலும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

தனுசு

கவலைகள் தீரக் கடவுள் வழி பாட்டை மேற்கொள்ளவேண்டிய நாள். கடன் சுமை அதிகரிக்கும். மாமன், மைத்துனர் வழியில் மனக்கசப்பு உருவாகும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினை அதிகரிக்கும்.

மகரம்

சந்தோஷம் அதிகரிக்கும் நாள்.வீடு வாங்கும் முயற்சி கைகூடும். பணத்திற்காக செய்திருந்த ஏற்பாடுகள் பலன்தரும். பிரிந்த நண்பர்கள் இணையும் வாய்ப்பு உண்டு. வரன்கள் வாயில்தேடி வரலாம்.

கும்பம்

நிம்மதி குறையும் நாள். வரவை விடச் செலவு கூடும். உத்தியோகத் |தில் சக ஊழியர்களால் தொல்லை உண்டு. வீடு கட்ட அல்லது வாங்கச் செய்த ஏற்பாடு தாமதப்படும். யாரை யும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.

மீனம்

நலன்கருதி எடுத்தமுயற்சி வெற்றி தரும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் பொருளாதார வளர்ச்சி கூடும். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும்.


Next Story