இன்றைய ராசிபலன் - 07.06.2024


இன்றைய ராசிபலன் - 07.06.2024
x
தினத்தந்தி 7 Jun 2024 12:51 AM GMT (Updated: 7 Jun 2024 4:54 AM GMT)

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் வைகாசி மாதம் 25-ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 08.35 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை

திதி : இன்று மாலை 05.30 வரை பிரதமை பின்பு துவிதியை

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 9.30 - 10.30

நல்ல நேரம் மாலை : 4.30 - 5.30

ராகு காலம் காலை : 10.30 - 12.00

எமகண்டம் காலை : 3.00 - 4.30

குளிகை காலை : 7.30 - 09.00

கௌரி நல்ல நேரம் பிற்பகல் : 12.30 - 01.30

கௌரி நல்ல நேரம் மாலை : 6.30 - 7.30

சூலம் : மேற்கு

சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி

ராசிபலன்

மேஷம்

காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம். பெற்றோரை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். முன்கோபத்தை தவிர்த்துவிடுங்கள். வெளியூர்பயணம்மேற்கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். வரவேற்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

ரிஷபம்

குலதெய்வ கோவில் சென்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். சொத்து ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது.மாணவர்கள் சாதனை புரிவர்.நீண்ட நாட்களாக தங்கள் பெற்றோர்கள்உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உடல்நலம் சீராகும்

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

மிதுனம்

குடும்பத் தலைவிகள் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்குவர். தங்களுக்கு பிடித்தகல்லூரி மற்றும் பள்ளியில் மாற்றம் செய்ய பெற்றோர்கள் சம்மதிப்பர். அரசு சம்பந்தப்பட்ட டென்டர் போன்றவைகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவர்.கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித்தொகை வந்து சேரும்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

கடகம்

வேற்று மதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. புது நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவர். உத்யோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உண்மையாக இருப்பர். அவர்கள் தங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள்.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

சிம்மம்

கலைஞர்களுக்கு அரசியலிருந்து அழைப்பு வரும். உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும். மார்கெட்டிங் பிரிவினர் தங்கள் இலக்கை எட்டுவர். உடல் ஆரோக்கியம் தேறும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விலகிச்சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

கன்னி

கல்வித் தடை நீங்கும். அரசியலில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். சிறுதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் கூடும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

துலாம்

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

விருச்சிகம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். வெளிநாடு செல்ல திட்டமிடுவர். பிரபலங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரம் சாதகமாக இருக்கும். பல்வலி, சளித்தொந்தரவு வந்து நீங்கும். தான் விரும்பிய பெண்ணை கைப்பிடிப்பீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : ஆரஞ்ச்

தனுசு

வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சலுகை கிடைக்கும். தொலைந்துபோன பொருள் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். தம்பதிகளிடையே இணக்கம் அதிகரிக்கும். தங்கள் விடாமுயற்சியால் முக்கியமான ஒன்றை முடித்துக்காட்டுவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

மகரம்

பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். நட்பு வட்டம் விரிவடையும். வெளியூர் பயணம் வெற்றி தரும். மாணவர்கள் விடுமுறையை உபயோகமாக பயன்படுத்துவர். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். பிள்ளைகளுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

கும்பம்

சொத்துவாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அதனால் வேலைச்சுமை அதிகமாகும். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

மீனம்

மற்றவர்களுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் விலகும். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். தொழிலதிபர்களிடமிருந்து வேலையாட்கள் தொழில் யுக்திகளை கற்றுக்கொள்வார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்டநிறம் : கருநீலம்


Next Story