இன்றைய ராசிபலன் - 03.07.2024


இன்றைய ராசிபலன் - 03.07.2024
x
தினத்தந்தி 3 July 2024 12:52 AM GMT (Updated: 3 July 2024 1:18 AM GMT)

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் ஆனி மாதம் 19-ம் தேதி புதன்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 4-51 வரை கிருத்திகை பின்பு ரோகிணி

திதி: இன்று காலை 7-45 வரை துவாதசி பின்பு திரயோதசி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 9.15 - 10.15

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் மாலை: 12. 00 - 1.30

எமகண்டம் காலை: 7.30 - 9.00

குளிகை காலை: 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை : 10.45 -11.45

கௌரி நல்ல நேரம் மாலை : 6.30 - 7.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டம்: அஸ்தம்

ராசிபலன்

மேஷம்

மாணவர்களுக்கு தாங்கள் நினைத்த பல்கலைகழகத்தில் இடம் கிடைக்கும். பெண்கள் பண விசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். குடும்பத் தலைவிகளுக்கு மாமியார் பக்கம் நல்ல மரியாதை கிடைக்கும். தங்கள் பேச்சிற்கு மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

பிரிந்திருந்த தம்பதியர் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒன்று சேருவர். அழகுக் கலை நிபுணர்களுக்கு கிளைகள் துவங்கும் எண்ணம் பலிக்கும். நெடுகாலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த காரியம் வெற்றியடையும். பல் கூச்சம் உள்ளதால் மருத்துவரை நாடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மிதுனம்

முதுகலை மற்றும் முனைவர் பட்டம் போன்ற உயர் கல்விக்கான முயற்சிகள் பலிதமாகும். இடுப்பு, மூட்டுகளில் வலி அளவு குறைய துவங்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் நல்ல லாபத்தை வந்தடையும். உங்கள் கனவு வீட்டினை நவீன பொருட்களை வாங்கி அலங்கரித்து குடிபுகுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

பிள்ளைகளின் திருமண சம்பந்தமான முயற்சியினால் நிச்சயதார்த்தத்திற்கு தேதி குறிப்பர். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கணவன் மனைவி உறவில் அன்பு கூடும். விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி பதக்கம் உண்டு.அவ்வப்போது பல்வலி வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

சிம்மம்

தொழிலதிபர்களுக்கு வங்கிக் கடன் பெற்று முதலீட்டினை பெருக்குவீர்கள். தம்பதிகள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். விளையாட்டில் உள்ளவர்களுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிப்புற கல்லூரியில் விளையாடி வெற்றிகோப்பையை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக மூல நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

பணம் தேவைக்கேற்ப வந்து கொண்டிருக்கும். குடும்பத் தலைவிகள் தங்கள் மகன், மகளிடம் கண்டிப்பை காட்டாமல் அவர்களிடம் நட்புரீதியாக அணுகி அவர்களை கண்காணிப்பது நல்லது. தம்பதிகளிடம் நல்ல புரிதல் உண்டாகும். தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

விருச்சிகம்

நீண்ட காலமாக உடல் நிலை சரியில்லாதவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகி வீட்டிற்கு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். முன் கோபம் வரும். ஆதலால், பொறுமையை கடைபிடிப்பது நல்லது. கோபத்தினால் நல்ல வாய்ப்பை விட்டுவிடாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

தனுசு

நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். அது தங்களுக்கு நல்ல உபயோகமான பயணமாக அமையும். கணவர் வீட்டாரிடம் இருந்து வந்த சண்டைகள் சமாதானமடையும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காண்பிப்பர். வெளிவேலைகளை இன்று முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

மகரம்

தம்பதிகள் இணைந்து முக்கிய முடிவுகளை எடுத்துவிடுவீர்கள். தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்காக தாங்கள் வைத்திருந்த டெபாசிட் தொகையை எடுத்து தங்க நகை ஆபரணங்கள் வாங்கி விடுவர். அரசு சம்பந்தப்பட்ட விசயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

நீண்ட நாட்களாக வைத்திருந்த கடன் தொகையை தங்களின் பழைய இடத்தை விற்று பைசல் செய்வீர்கள். உடல் நலத்தில் முன்னேற்றம் காணலாம். வெளியூரில் உள்ள தங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

பெற்றோரின் நீண்ட நாள் கடன் பிரச்சினையைத் தீர்த்து விடுவீர்கள். குடும்பத் தலைவிகளின் நீண்ட நாள் ஆசையான ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்வீர்கள். தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். இடுப்பு, கை, கால்களில் வலி வரும். இயற்கை மருத்துவரை நாடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா


Next Story