கூகுள், அமேசான் இணையதளங்களை செயற்கை நுண்ணறிவு அழித்துவிடும் - பில்கேட்ஸ்


கூகுள், அமேசான் இணையதளங்களை செயற்கை நுண்ணறிவு  அழித்துவிடும் - பில்கேட்ஸ்
x

கூகுள், அமேசான் இ-காமர்ஸ் இணையதளங்களை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அழித்துவிடும் என பில்கேட்ஸ் கூறி உள்ளார்.

வாஷிங்டன்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தீவிரமடைந்து வருகிறது மற்றும் பெரிய நிறுவனங்கள் இதற்காக பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்து உள்ளன. கடந்த சில மாதங்களில், கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா மற்றும் ஓபன்ஏஐ ஆகியவை தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பது தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

அதே நேரத்தில், இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானும் செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் வலுவான போட்டியாளராக இருப்பதை நிரூபிக்க செயற்கை நுண்ணறிவு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டது.

இருப்பினும், உலகின் முன்னணி இ-காமர்ஸ் இணையதளங்களை செயற்கை நுண்ணறிவு அழிவை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிரது. இது குறித்து பில் கேட்ஸ் கூறும் போது செயற்கை நுண்ணறிவு எழுச்சியானது இ-காமர்ஸ் நிறுவனங்களை அழித்து விடும் என்று சமீபத்தில் கூறினார்.

பயனர்களின் நேரத்தைச் சேமிக்க சில பணிகளைச் செய்யக்கூடிய தனிப்பட்ட செயற்கை நுண்ணறிவு முகவரை உருவாக்கி நிர்வகிக்கும் டெவலப்பர் மட்டுமே செயற்கை நுண்னறிவு பந்தயத்தில் வெற்றி பெறுவார் என்று கேட்ஸ் கூறினார்.


Next Story