கட்டுமானத்தில் தெர்மோகோல்


கட்டுமானத்தில் தெர்மோகோல்
x

தெர்மோகோலைக் கட்டுமானங்களுக்கும் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்துகிறார்கள்.

வழக்கமான கட்டுமானங்களையும், பூச்சுகளையும் மேற்கத்திய நாடுகளின் கட்டுமானங்களில் இன்றைக்குப் பார்க்கவே முடியாத அளவுக்கு, அவர்கள் புதிய முயற்சிகளைக் கட்டுமானத் துறையில் எடுத்துவருகின்றனர். வளர்ந்த நாடுகளில் எல்லாமே இதுதான் இன்றைய நிலை. இந்தியாவும் அந்த நிலையை எட்ட வேண்டியது அவசியம் என அத்துறை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் சில முயற்சிகளில் பொருத்தமான சிலவற்றை இந்தியாவிலும் பயன்படுத்திப் பார்க்கலாம். எக்ஸ்பாண்டெட் பாலிஸ்டிரின் எனப்படும் பொருளைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம். இது என்னவோ ஏதோவென்று யோசிக்க வேண்டாம்.

தெர்மோகோல்தான். நமக்குத் தெரிந்து டி.வி., கம்ப்யூட்டர் வாங்கினால் அதை வீட்டுக்கு எடுத்துவரும்வரையில் சேதமடையாத வகையில், அட்டைப் பெட்டிக்குள் அடைத்து எடுத்துவரும் பொருளாகத்தான் தெர்மோகோலை இந்தியாவில் பயன்படுத்துகிறோம். ஆனால் தெர்மோகோலைக் கட்டுமானங்களுக்கும் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்துகிறார்கள். உயர் அழுத்த நிலையில் தெர்மோகோல் பாறையின் தன்மைக்கு இறுகிவிடுமாம். கட்டுமானங்களின் வெளிப்பூச்சுக்கு சிந்தடிக் பூச்சைப் பயன்படுத்துகின்றனர். 1960-களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பூச்சு, நம்மூரில் சுவர்களில் பயன்படுத்தப்படும் பூச்சு போல் அமெரிக்காவில் ரொம்ப சாதாரணமாக உள்ளது.


Next Story