தம்பதியருக்கு விடுப்பு


தம்பதியருக்கு விடுப்பு
x

குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் நடைமுறை உலகமெங்கும் பின்பற்றப்படுகிறது. ஆனால் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மட்டுமே இந்த சலுகை முறையாக வழங்கப்படுகிறது.

இருப்பினும் இந்த விடுமுறை கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். குழந்தை பேறுக்கு பிறகு கணவருக்கும் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு இருக்கிறது. அதனால் கணவருக்கும் விடுப்பு வழங்கும் நடைமுறையை பல நாடுகள் பின்பற்றுகின்றன.

இந்த விஷயத்தில் சுவீடன் தனி கவனம் செலுத்துகிறது. அந்த நாட்டில் குழந்தை பிறப்புக்கு தம்பதியர் இருவருக்கும் 480 நாட்கள் வரை விடுமுறை வழங்கப்படுகிறது. அதுவும் சம்பளத்துடன் கூடிய விடுப்பாக அனுமதிக்கப்படுகிறது. குழந்தையை தத்தெடுப்பவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.


Next Story