பசுக்களின் கவலையை போக்கும் கண்ணாடி
கவலையை குறைக்கும் முயற்சியாக இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் பொருத்தப்பட்ட கறவை மாடுகளின் பாலின் அளவு மற்றும் தரம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது எனபதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
கால்நடை மருத்துவர்கள் மற்றும் பால் உற்பத்திக்கான ஆலோசகர்களின் உதவியுடன், ரஷிய பண்ணை ஒன்று மாடுகளுக்கு சில பெரிய அளவிலான விர்ச்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்.) கண்ணாடிகளை உருவாக்கியுள்ளது. மாஸ்கோவின் ரமென்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ரஸ்மோலோகோ பண்ணையில் மாடுகளுக்கு வி.ஆர்.கண்ணாடிகள் பொருத்தப்பட்டு சோதனைகள் நடந்தது.
கறவை மாடுகளின் கவலையை குறைக்கும் முயற்சியாக இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் (வி.ஆர்) மாடுகளின் கண்களில் பொருத்தப்பட்டன. அவற்றின் கண்களுக்கு புற்கள் தெரிவது போன்ற மாய தோற்றத்தை இந்த வி.ஆர். கண்ணாடிகள் ஏற்படுத்தி கொடுக்கின்றன. அதனை பார்க்கும்போது கவலை குறைந்து, அமைதியான மனநிலை நிலவுவதால் பாலின் அளவு மற்றும் தரம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது எனபதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
Related Tags :
Next Story