மாசுபட்ட நகரமாக மாறிய 'டாக்கா'


மாசுபட்ட நகரமாக மாறிய டாக்கா
x

உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக வங்காள தேசத்தின் தலைநகர் டாக்கா மாறி உள்ளது.

உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக வங்காள தேசத்தின் தலைநகர் டாக்கா மாறி உள்ளது. இத் தனைக்கும் மே தின விடுமுறை காரணமாக அங்கு சாலைகளில் போக்குவரத்து வெகுவாக குறைந்து இருந்தது. தொழிற்சாலைகள் செயல்படவில்லை.

அப்படி இருந்தும் மே 1-ந்தேதி எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி டாக்காவில் காற்றின் தரக்குறியீடு 175 ஆக இருந்தது. இது அந்நகரத்தை உலகிலேயே மிகவும் மாசுபாடு மிகுந்த நகரமாக மாற்றிவிட்டது. இந்த பட்டியலில் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரம் 173 தரக்குறியீடுடன் 2-வது இடத்தில் உள்ளது. மியான்மரின் யாங்கூன் நகரத்தில் காற்றின் தரக்குறியீடு 140 ஆக உயர்ந்து 3-வது இடத்தை பிடித்துள்ளது.

டாக்காவில் காற்று மாசுபாடு எப்போதுமே பிரச்சினையாக இருந்து வருகிறது. அதிலும் குளிர்காலத்தில் காற்றின் தரம் மோசமடைகிறது. மேலும் பருவமழை நன்றாக பெய்யும்போதும் இதே நிலை நீடிக்கிறது.

காற்றின் தரக்குறியீடு (ஏ.கியூ.ஐ) 101 முதல் 150 வரை இருப்பது நாள்பட்ட நோய்பாதிப்பு கொண்டவர்களுக்கு ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. 151 முதல் 200 வரை இருப்பது மற்றவர்களுக்கு ஆரோக்கியமற்றதாக குறிப்பிடப்படுகிறது. 201 மற்றும் 300-க்கு இடைப்பட்ட அளவில் காற்று தரக்குறியீடு இருப்பது மோசமான நிலையாக கருதப்படுகிறது.

அதே வேளையில் காற்று தரக்குறியீடு 301-க்கு மேல் இருப்பது ஆபத்தானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அசுத்தமான காற்றை சுவாசிப்பது இதய நோய், நாள்பட்ட சுவாச கோளாறுகள், நுரையீரல் தொற்று மற்றும் புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்க செய்துவிடும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.


Next Story