மலைக்குள் ஒரு சொகுசு கப்பல்
சொகுசு கப்பல் என்றால் கடலுக்குள்தான் மிதக்கும் என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்ட தோற்றத்தை கொண்டிருக்கிறது, சன் குரூஸ். தென் கொரியாவில் உள்ள புகழ்பெற்ற ஜியோங்டாங்ஜின் கடற்கரை பகுதியில் ஒரு மலைக்குன்றின் மீது அமைந்திருப்பதுதான் சிறப்பம்சம். மலை மீது ஏறி கப்பலுக்குள் நுழைந்தாலும் கடலுக்குள் இருப்பது போன்ற உணர்வை தரும் வகையில் இது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இதன் மேல் தளத்துக்கு சென்றால் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகும் காட்சியை துல்லியமாக பார்வையிடலாம். தங்கும் அறைகள், உணவகங்கள், பார், பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது. இந்த கப்பல் 541 அடி (165 மீட்டர்) நீளமும், 148 அடி (45 மீட்டர்) உயரமும், 30 ஆயிரம் டன் எடையும் கொண்டது.
Related Tags :
Next Story