உலக இயற்கை பாதுகாப்பு தினம்


உலக இயற்கை பாதுகாப்பு தினம்
x
தினத்தந்தி 27 July 2023 9:00 PM IST (Updated: 27 July 2023 9:01 PM IST)
t-max-icont-min-icon

இயற்கை வளங்களை பாதுகாத்தல், இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஜூலை 28-ந் தேதி 'உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

மனிதன் உள்பட உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்கு ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. இவற்றுக்கு அடிப்படையான இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் கடமையாகும். பிரபஞ்சத்தில் எண்ணற்ற கிரகங்கள் இருந்தாலும் மனிதனும், மற்ற உயிரினங்களும் வாழ்வதற்கு தேவையான இயற்கை வளங்கள் நிறைந்தது பூமி மட்டுமே. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ச்சி பெற்று இருக்கும் இதே நேரத்தில், நமது தேவைகளுக்காக இயற்கை வளங்களை அழிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நவீனமயமாதல் என்ற பெயரில் பசுமைக்காடுகள், மரங்கள், உயிரினங்கள், விளை நிலங்கள், நீர் நிலைகள் என உலக அளவில் இயற்கை வளங்கள் குறைந்து வருகின்றன. இதன்காரணமாக, உலகின் பல்வேறு இடங்களில் இயற்கை சீற்றங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாறுபாடு ஆகியவை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 1948-ம் ஆண்டு உலகளாவிய இயற்கை பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டது. இயற்கை வளங்களை பாதுகாத்தல், இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஜூலை 28-ந் தேதி 'உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

பூமியில் உள்ள மொத்த நீரில், ஒரு சதவீதம் மட்டுமே மனித பயன்பாட்டிற்கு கிடைக்கிறது. மீதமுள்ள நீர் உப்பு அல்லது புதிய உறைந்த நீர். எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மழைநீரை பாசனத்திற்காகவும் மற்ற விஷயங்களுக்காகவும் சேமிக்கவும் நாம் மழைநீர் சேகரிப்பை பயிற்சி செய்யலாம். இந்த நடைமுறையானது நீர்நிலைகளில் இருந்து நீரின் பயன்பாட்டைக் குறைக்க உதவும்.

மரங்களை நடுவது ஒரு உன்னதமான நடைமுறை. இது மண் அரிப்பு சம்பவங்களை குறைக்க உதவும். சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. இது சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கும் உதவுகிறது . தாவரங்கள் பல பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வீடுகளாகவும் செயல்பட முடியும். எனவே, இது ஒரு நல்ல நடைமுறை.

வீட்டுக்கு வீடு பெட்ரோல், டீசல் வாகனங்கள் பெருகிவிட்டன. சாலையெங்கும் காார்பன்டை ஆக்சைடை கக்கியபடி வாகனங்கள் சீறிப்பாய்கின்றன. அத்தனை வாகனங்களில் இருந்தும் மேலே செல்லும் கரியமிலவாயு நம் ஓசோன் படலத்தையே ஓட்டையிட செய்துவிட்டது. இதன் காரணமாகத்தான் முறையற்ற மழை பொழிவு ஏற்படுகிறது. தேவை ஏற்படும் போது இல்லாமலும், தேவைப்படாதபோது மழை கொட்டுவதும் விவசாயத்துக்கு அழிவை ஏற்படுத்தி வருகிறது. காடு, மழை, ஆறு, காற்று, மண் இவை அனைத்தும் இயற்கை நமக்கு கொடுத்த அருங்கொடைகள். அதை சிதைக்காமல் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கவேண்டும். அதற்கு நம் அருகே இருக்கும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். அதுபற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

இது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் கடமையாகும். வருங்கால தலைமுறைக்கு தொழில்நுட்பம், பொருட்செல்வம் ஆகியவற்றைவிட, இயற்கை வளங்களையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் விட்டுச்செல்வதே சிறந்தது.


Next Story