மிகப்பெரிய பவளப்பாறை..!


மிகப்பெரிய பவளப்பாறை..!
x

உலகிலேயே மிகப் பெரிய பவளப்பாறை ஜப்பானில் ஓகினா தீவின் கடற்கரையில் அமைந்துள்ளது.

கடலில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான மீன் வகைகள் உள்ளன. இவற்றில் 100 மீன் வகைகள்தான் மனித உயிருக்கு ஆபத்தானவை. டோட், வாஸ்ப், வீலர், ஸ்கார்ப்பியன், ஜிப்ரா, ஸ்டோன்பிஷ் ஆகியவை இவற்றுள் அடங்கும்.

மனித உடம்பில் ரத்த ஓட்டம் பற்றி ஆராய்ந்தவர் வில்லியம் ஹார்வி. ஆனால், இவருக்கு 400 ஆண்டுகளுக்கு முன்பே மனித உடற்கூறு பற்றி ஆராய்ந்து ரத்த ஓட்டத்தின் பாதையை படம் வரைந்தவர் ஓவியர் லியானார்டோ டாவின்ஸி.

ஆக்சிஜன், ஹைட்ரஜன், கார்பன் டை ஆக்ஸைடு வாயுக்களைக் கண்டுபிடித்தவர் விஞ்ஞானி ஆண்ட்வான் லோரன் லவோய்ஸியர். ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் இணைந்ததே நீர் என்பதை கண்டுபிடித்தவரும் இவரே.

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி காகரின். ரஷிய நாட்டின் விண்வெளி வீரரான இவர், விண்வெளியில் 89 நிமிடங்கள் தங்கியிருந்தார்.

நோய் வந்தால் தங்கள் பெயரை மாற்றிக் கொள்கின்றனர் திபெத்தியர்கள். பெயரை மாற்றினால் நோய் குணமாகிவிடும் என்பது இவர்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொருவருக்கும் பல பெயர்கள் உள்ளன.

இறகில் எழுதும் வழக்கம் கி.பி. 5-ம் நூற்றாண்டில் வழக்கத்திற்கு வந்தது. அது 18-ம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.

சிலப்பதிகாரத்தை செக்கோஸ்லோவேக்கியா மொழியில் மொழிபெயர்த்தவர் டாக்டர் கமில் ஸ்வெலபில்.

திறந்தவெளி பல்கலைக்கழகக்கல்வி முதன் முதலாக இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை அருகே உள்ளது மனோரா என்ற வெற்றிக்கோட்டை. 1814-ல் மராத்திய மன்னர் சர்போஜி இதைக் கட்டினார். மினாரெட் என்றழைக்கப்பட்ட இது தொடக்க காலத்தில் கலங்கரை விளக்கமாக இருந்தது.

பெரு நாட்டின் தலைநகர் லிமாவின் வரைபட அமைப்பு ஆக்டோபஸ் போலவே இருப்பதால், இதை 'ஆக்டோபஸ் நகரம்' என்றழைக்கிறார்கள்.

உலகிலேயே மிகப் பெரிய பவளப்பாறை ஜப்பானில் ஓகினா தீவின் கடற்கரையில் அமைந்துள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் புஷ்னெல் என்பவர் 1778-ம் ஆண்டு கண்டு பிடித்தார்.

தேனீ, எறும்பு, மூட்டைப்பூச்சி, குளவி, பட்டாம்பூச்சி, தேள், சிலந்தி, வெட்டுக்கிளி - இவைகளில் பெண் இனத்திற்கே சக்தி அதிகம்.

இந்தியாவில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாசுமதி அரிசி அதிகளவில் உற்பத்தி ஆகிறது. ஆண்டுக்கு 45 லட்சம் டன். 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நம் நாட்டிலிருந்து இந்த அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.


Next Story