மண்தான் அடிப்படை


மண்தான் அடிப்படை
x

உலகில் உற்பத்தி செய்யப்படும் 95 சதவீத உணவுக்கு மண்தான் அடிப்படை. ஒரு நாட்டின் மூலதனம் என்பது, அந்நாட்டு விவசாயிகளால் பராமரிக்கப்படும் மண்ணில்தான் இருக்கிறது.

உலக அளவில் ரசாயன உரங்களின் பயன்பாடு பல ஆயிரம் மடங்கு அதிகரித்துவிட்டது. மண்வளத்தைப் புறக்கணித்துவிட்டு, விளைச்சலில் மட்டுமே கவனம் செலுத்தியதால்தான் சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, நம் உடல்நலனுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த மண்ணில் இருந்து எந்த அளவுக்கு சத்துக்களை உறிஞ்சி எடுக்கிறோமோ, அந்த அளவுக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பூமியையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். அரிசியை மட்டும் எடுத்துவிட்டு வைக்கோல், உமி போன்றவற்றை எரிப்பது சுற்றுச்சூழலுக்குக் கேடு தரும். அதை மட்க வைத்து, அதே நிலத்துக்கு உரமாகத் தர வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தனி மனிதர்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது அவசியம். இவை எல்லாம் ஏற்கெனவே இந்தியாவில் நடைமுறையில் இருந்தவைதான். அவற்றை அறிவியல்பூர்வமாக மேம்படுத்தி, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.

அடுத்த 20 ஆண்டுகளில் 70 சதவீத மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வார்கள். எல்லாவற்றையும் தொழில்நுட்பங்கள் மூலம் சரி செய்துவிடலாம் என்று அலட்சியமாக இருக்காமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும் என்கிறார்கள், வேளாண் வல்லுனர்கள்.


Next Story