ரிசர்வ் வங்கி


ரிசர்வ் வங்கி
x

1935-இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949-இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும்.

1926-ம் ஆண்டு ராயல் கமிஷன் ஆன் இந்தியன் கரன்சி அண்ட் பைனான்ஸ் என்ற பிரிட்டிஷ் குழுவின் பரிந்துரையில்தான் ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்கு பின் பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க இந்த குழு அமைக்கப்பட்டது.

1935 ஏப்ரல் 1-ந் தேதி கல்கத்தாவை தலைமை இடமாகக் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது.

1937 முதல் மும்பையை தலைமை இடமாக கொண்டு ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது.

1949-ல் சுதந்திரத்துக்கு பிறகு ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்டது. இதுவரை ரிசர்வ் வங்கிக்கு கவர்னராக பெண் பொறுப்பு வகித்ததில்லை.

பாரத ஸ்டேட் வங்கி, 1806-ல் கொல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வங்கி இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்குகிறது.

மத்திய-மாநில அரசுகளின் வரவு-செலவு கணக்குகள் இவ்வங்கி மூலமே நடைபெறுகின்றன. இவ்வங்கி கல்கத்தா வங்கி எனத் தொடங்கப்பட்டு இம்பீரியல் வங்கியாக உருவெடுத்து பின் பாரத ஸ்டேட் வங்கியாக மாறியது. இந்த வங்கியின் கிளைகளில் 34 சதவீதம் கிராமப்புறங்களில் உள்ளன.


Next Story