அறிந்து கொள்வோம்....பொது அறிவு...
அறிவியல் சார்ந்த பொது அறிவு தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
ஆசியாவின் முதல் பெண் ரெயில் ஓட்டுநர் சுரேகா யாதவ்.
இந்தியாவின் மிகப் பெரிய சரக்கு ரெயில் `சூப்பர் வாசுகி' ஆகும். இது 3.5 கி.மீ நீளமும், 27 ஆயிரம் டன் கொள்ளளவும் கொண்டது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 25 ஆயிரத்து 962 டன் நிலக்கரியை ஏற்றிச் செல்ல முடியும்.
இந்தியாவின் மிகப்பெரிய தேசிய பூங்கா ஹெமிஸ் தேசிய பூங்கா ஆகும். இது 1981-ம் ஆண்டு, 600 சதுர கி.மீ பரப்பில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 4400 சதுர கி.மீ பரப்பளவாக உள்ளது.
அந்தமான்-நிகோபரில் சிறியதும் பெரியதுமாக மொத்தம் 572 தீவுகள் உள்ளன. இதில் 38 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்.
உலகின் குடியுரிமை பெற்ற முதல் இயந்திர மனித தானியங்கி (ரோபோட்) சோபியா ஆகும். இந்த குடியுரிமையை சவுதி அரேபிய அரசு, அக்டோபர் 2017-ம் ஆண்டு வழங்கியது.
Related Tags :
Next Story