போதைப்பொருள் ஒழிப்பு பற்றி அறிவோம்...


போதைப்பொருள் ஒழிப்பு பற்றி அறிவோம்...
x

போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் மனக்குழப்பம் ஏற்பட்டு தானே பேசிக்கொள்வது. எதைக்கண்டாலும் பயப்படுவது போன்றவை ஏற்படுகிறது.

முன்னுரை:

போதை அது அழிவின் பாதை என்ற நோக்கத்துடன் சமுதாயத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளவில் எழுந்திருக்கும் பிரச்சினை போதை பழக்கத்திற்கு அடிமை ஆவது ஆகும். வயது வரம்பும் இன்றி சமுதாயத்தில் போதை பழக்கம் வேருன்றியுள்ளது.

போதை பழக்கம் ஏற்பட காரணங்கள்:

பள்ளிப்பருவத்தில் நட்பு வட்டாரத்தினர் கொடுக்கும் அழுத்தத்தினாலும் வசிப்பிட சூழல்களாலும் திரைபிரபலங்கள் போன்றவர்களை பார்த்தும் பழகுதல்.

சுயவிருப்பம் தற்காலிக மகிழ்ச்சிக்காக மற்றும் சிலரின் தவறான நட்பு போன்ற பல காரணங்களால் போதை பழக்கம் ஏற்படுகிறது.

உலக போதை மருந்துகள் ஒழிப்பு தினம்:

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ந்தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளாக அனுசரிக்கப்படுகிறது.

போதைப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்:

பெற்றோர்கள் அரவணைப்பு குறைதல்

பணிநேரம் ஆற்றல் அனைத்தையும் இழத்தல்

உடல் நலம் கெடுதல்

சுயப்பொறுப்புகளை புறக்கணித்தல்

குற்றச்செயலில் ஈடுபடுதல்

நேரவிரயம் ஏற்படுதல்

புற்றுநோய்கள் வருதல்

குடும்ப உறுப்பினர்களால் ஒதுக்கப்படுதல்

போதைப்பழக்கத்தில் இருந்து மீளும் வழிமுறைகள்:

போதைப்பழக்கத்திற்கு அடிமை ஆனவர்கள் மீளுவதற்கு தன்னம்பிக்கையுடன் இருத்தல் வேண்டும். போதைக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து விடுபடுவதற்கு டாக்டரை அணுகி ஆலோசனை பெறலாம். மறுவாழ்வு மையங்களுடன் முறையான சிகிச்சை எடுத்து கொள்வதன் மூலம் போதைப்பழக்கத்தில் இருந்து மீண்டு வரமுடியும்.

போதைப்ெபாருள் தடுப்பு சட்டம்:

1985-ம் ஆண்டு இந்த போதை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

சட்டப்பிரிவு 31 ஏ மரண தண்டனை வரை கொண்டு வர வழிவகை செய்தது.

1989, 2001 மற்றும் 2014-ல் இயற்றப்பட்ட உறுதி சட்டங்களின் மூலம் போதைப்பொருள் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

முடிவுரை:

இவ்வுலகில் 40 வினாடிக்கு ஒருவர் உலகில் புற்றுநோயால் இறக்கிறார்கள்.

1950 முதல் 1980-ம் ஆண்டு வரை 19.5 சதவீதமாக இருந்த போதைப்பழக்கம், 1981 முதல் 1986 வரை மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் என்ற புள்ளி விவரம் கூறி பதற வைக்கிறது.

நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு விளைவிக்கும் போதைப்பொருளின் பாவனையை தடுத்து நிறுத்துவதோடு அவற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும்.


Next Story