சண்டைக்கோழி..!


சண்டைக்கோழி..!
x

பொதுவாக பெண்கள் உள்ளுணர்வு சார்ந்த விவகாரங்களிலும், காரியத்தைச் சாதிப்பதிலும் ஆண்களை விட வல்லவர்கள். ஆனால், மூச்சு விடாமல் பேசுவதிலும் வம்பு அளப்பதிலும் வல்லவர்களுக்கெல்லாம் வல்லவர்கள்.

பெண்களால் மட்டும் எப்படி இடைவிடாமல் வேகமாகப் பேச முடிகிறது? இதற்கான காரணத்தை, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

இதற்காக, ஆணும் பெண்ணுமாக 146 பேரின் மூளையை கம்ப்யூட்டர் ஸ்கேன் மூலம் ஆராய்ந்தபோது, பெண்களின் மூளைக்குள் இருக்கும் 'கார்பஸ் கலோசம்' என்ற பகுதி ஆண்களை விட கால் பங்கு வரை பெரிதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மனித மூளையின் இடது மற்றும் வலது பகுதிகளை இணைக்கும் பாலமாக கார்பஸ் கலோசம் விளங்குகிறது.

பெண்களின் மூளையில் இந்த கார்பஸ் கலோசம் பலசாலியாக இருந்து, மிக வேகமாக தகவல்களைக் கடத்துவதால்தான் ஆண்கள் மனம் சிந்தித்து முடிக்கும்போதே பெண்கள் அதைப் பேசி முடித்து விடுகிறார்கள்.

மேலும், கார்பஸ் கலோசம் வலுவாக இருப்பதால் பெண்களின் மூளையில் அதிக ரத்தம் பாய்ந்து, நியூட்ரான்களை சிறப்பாகப் பணியாற்ற வைக்கிறது. உள்ளுணர்வு சார்ந்த மொழித் திறமைகள் ஆண்களை விட பெண்களுக்குக் கூடுதலாக இருப்பதற்கும் இதுதான் காரணமாம்.

பெண்களின் மூளைக்குள் இருக்கும் 'கார்பஸ் கலோசம்' என்ற பகுதி ஆண்களை விட கால் பங்கு வரை பெரிதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


Next Story