உடல் பலவீனமாக இருக்கும்போது... உடற்பயிற்சி செய்யலாமா..?
உங்கள் உடல் கட்டுமஸ்தானதாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க, தினமும் உடற்பயிற்சி அவசியம்.
தினசரி உடற்பயிற்சி என்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஏரோபிக் பயிற்சிகளை தினசரி 45 நிமிடங்கள் செய்தால் தொற்றுநோய் பிரச்சினை குறையும் என்பது ஆய்வு ரீதியாக கண்டறியப்பட்ட உண்மை. ஆனால், உடல் பலவீனமாக இருக்கும்போது, உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள், மருத்துவர்கள்.
"ஒருவரின் உடல் காய்ச்சல் அல்லது சளியினால் பாதிக்கப்பட்டு சோர்வடைந்திருக்கும் நிலையில் உடற்பயிற்சி செய்வது, உடல் நோயிலிருந்து மீண்டு வருவதை தாமதமாக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, தொற்றுநோய்க் கிருமிகளை எதிர்த்து தாக்கிக் கொண்டிருக்கும்போது உடலை வருத்தும் உடற்பயிற்சிகள், உடல் நிலையை இன்னும் மோசமாக்கும். எனவே உடல் சற்று சீரடைந்த பின்னரே உடற்பயிற்சி செய்வது பயனளிக்கும். இல்லையேல், லேசான உடற்பயிற்சிகளை செய்யலாம்'' என்கிறார்கள், மருத்துவர்கள்.