அமெரிக்க ஓபன் : முதல் சுற்றில் நெதர்லாந்து வீரரை எதிர்கொள்ளும் இந்தியாவின் சுமித் நாகல்


அமெரிக்க ஓபன் : முதல் சுற்றில் நெதர்லாந்து வீரரை எதிர்கொள்ளும் இந்தியாவின் சுமித் நாகல்
x

Image : AFP 

தினத்தந்தி 23 Aug 2024 5:05 PM GMT (Updated: 23 Aug 2024 6:52 PM GMT)

இந்தியாவின் சுமித் நாகல் நெதர்லாந்து வீரர் டாலன் கிரீஸ்க்பூர் உடன் மோதுகிறார்

நியூயார்க்,

4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று அமெரிக்க ஓபன் தொடராகும். ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் (யு.எஸ். ஓபன்) டென்னிஸ் தொடர் வரும் 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் முறை மூலம் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தரவரிசையில் 72 வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், தரவரிசையில் 40வது இடத்தில் உள்ள நெதர்லாந்து வீரர் டாலன் கிரீஸ்க்பூர் உடன் மோதுகிறார்.


Next Story