ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி


ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி
x

Image Courtesy: AFP / Daniil Medvedev

ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.

துரின்,

உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நேற்று தொடங்கியது. இதன் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 8 வீரர்கள் 'லீ நாஸ்டாசே', 'ஜான் நியூகாம்பே' என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

'லீ நாஸ்டாசே' பிரிவில் 'நம்பர் ஒன்' வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி), முன்னாள் சாம்பியன் டேனில் மெத்வதேவ் (ரஷியா), 6-ம் நிலை வீரர் டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), முதல் முறையாக கால்பதிக்கும் அலெக்ஸ் டி மினாரும் (ஆஸ்திரேலியா), 'ஜான் நியூகாம்பே' பிரிவில் 2 முறை சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 7-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே), 9-ம் நிலை வீரர் ஆந்த்ரே ரூப்லெவும் (ரஷியா) இடம் பிடித்துள்ளனர்.

இதில் ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் டேனில் மெத்வதேவ் (ரஷியா), அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 4-6. 3-6 என்ற செட் கணக்கில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி கண்டார்.


Next Story