இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்; ஹோல்கர் ரூனே இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்; ஹோல்கர் ரூனே இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 15 March 2025 11:00 PM (Updated: 15 March 2025 11:00 PM)
t-max-icont-min-icon

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது.

கலிபோர்னியா,

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஹோல்கர் ரூனே (டென்மார்க்) - டேனியல் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட ஹோல்கர் ரூனே 7-5, 6-4 என்ற செட் கணக்கில் டேனியல் மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.


Next Story