இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்


இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

image courtesy: PTI

அல்காரஸ் 4-வது சுற்றில் டிமிட்ரோவ் உடன் மோத உள்ளார்.

இண்டியன்வெல்ஸ்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நட்சத்திர வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), டெனிஸ் ஷபோவலோ உடன் மோதினார். இதில் 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்ற அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இவர் 4-வது சுற்றில் டிமிட்ரோவ் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.


Next Story