குற்றால அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு


குற்றால அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 23 May 2024 7:01 PM IST (Updated: 24 May 2024 2:30 AM IST)
t-max-icont-min-icon

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் குற்றால அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

தென்காசி,

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்தமழையின் காரணமாக மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.குறிப்பாக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது .இதனால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது

நீர் வரத்து குறைந்ததால் குற்றாலத்தில் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்திருந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது


Next Story